யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

vinoth
புதன், 8 ஜனவரி 2025 (11:49 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சில மாதங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

தற்போது விறுவிறுப்பாக இந்தபடத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை உருவாக்க ஹாலிவுட்டில் ‘ஜான் விக்’ உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய ஜே ஜே பெர்ரி இணைந்துள்ளார்.

தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஒரு ரெட்ரோ பாரில் யாஷ் நடந்துசெல்ல அந்த பாரினுள் பெண்கள் கிளாமராக நடமாடுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்