யாஷின் கே.ஜி.எஃப்-2 பட முக்கிய அப்டேட் !

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (16:13 IST)
நடிகர் யாஷ் கே. ஜி. எஃப் படத்தின் முக்கிய அப்டேட் வெளியிட்டுள்ளார் இப்படத்தில் நடித்து நடிகை . இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்,  கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தையும் இயக்குந பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். இப்படத்தில் மாளவிகா அவினாஷ் நடித்துள்ளதால் இவருக்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இப்படத்தில் 50 நாட்களுக்குப் பிறகு பணிக்குத் திரும்பியுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் யாஷின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேஜிஎஃ-சேப்டர் 2 படம் ஜூலை மாதம் 16ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்