நடிகர் விமல் வீட்டுக்கு திமுக பிரமுகர் திடீர் விஜயம்… அரசியலுக்கு இழுக்கும் முயற்சியா?

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (17:19 IST)
நடிகர் விமல் வீட்டுக்கு திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கே என் நேரு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரம் என்பதால் அனைத்துக் கட்சியினரும் தங்கள் கட்சிக்கான பிரச்சாரகர்களை கட்சியில் இணைத்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் என்றாலே சினிமா நடிகர்கள் இல்லாமலா? திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சி பேச்சாளர்களில் குறிப்பிடத்தகுந்த அளவு சினிமா நடிகர், நடிகைகளை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேரு மனப்பாறையில் உள்ள நடிகர் விமல் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விமல் திமுகவில் சேருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் விமலுக்கு குழந்தை பிறந்த பொழுது பெயர் சூட்டும் விழாவுக்கு நேருவை அழைத்துள்ளார். அப்போது வர முடியாததால் இப்போது வந்து குழந்தையை பார்த்து சென்றதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்