கேங் லீடர் ரீமேக்கில் சூர்யாவா? வாய்ப்பில்ல ராஜா என சொல்லும் கோடம்பாக்கம்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (14:58 IST)
நடிகர் நானி நடிப்பில் உருவான கேங் லீடர் பட ரீமேக்கில் சூர்யா நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் குமார் தமிழில் தம், யாவரும் நலம்  மற்றும் 24 ஆகிய படங்களை இயக்கியவர். அதே போல தெலுங்கில் அவர் இயக்கிய மனம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் நானியை வைத்து கேங் லீடர் எனும் படத்தை இயக்கினார். படம் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும் ஹாலிவுட் படமான விடோஸை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது என்ற எதிர்விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார் இயக்குனர் விக்ரம் குமார். இந்த ரீமேக் படத்தில் இப்போது சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் சுத்தமாக இல்லை என்று சொல்கிறது படக்குழு. ஏனென்றால் சூர்யா தமிழுக்கு சமமாக தெலுங்கிலும் மார்க்கெட் வைத்திருக்கும் நடிகர். ஆனால் ஏற்கனவே தெலுங்கில் வெளியான திரைப்படத்தை ரீமேக் செய்து நடித்தால் தெலுங்கில் இருந்து வருவாய் வராது என்பதால் சூர்யா நடிக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்