இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 84,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,93,59,155 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்துள்ளது.
அதோடு தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,21,311 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,79,11,384 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10,80,690 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.