பிந்து மாதவி எதுக்காக ‘பிக் பாஸ்’ல கலந்து கொண்டார்னு தெரியுமா?

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (12:58 IST)
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பிந்து மாதவி கலந்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.



 
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, தமிழ் ரியாலிட்டி ஷோ வரலாற்றில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவருமே, முன்பைவிட எல்லோருக்கும் தெரிந்த முகமாகியிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிந்து மாதவிக்கு, ஆரம்பத்தில் கலந்துகொள்ள இஷ்டமே இல்லையாம். ‘விஜய் டிவியில் இருந்து இந்த மாதிரி உனக்கு அழைப்பு வந்தது’ என பிந்துவிடம் நண்பர் சொன்னபோது, ‘எனக்கு அதிலெல்லாம் இஷ்டம் இல்லை’ என்று சொல்லிவிட்டாராம் பிந்து. காரணம், தன்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி வெளியில் பேச விரும்பாதவர் பிந்து மாதவி. அப்படிப்பட்டவர் கேமராவுக்கு முன் ரியலாக எப்படி இருக்க முடியும்?

‘ஒருநாள் டைம் எடுத்து யோசித்துப் பார்’ என்று சொல்லியிருக்கிறார் பிந்துவின் நண்பர். காரணம், பிந்து நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஜாக்சன் துரை’. அதன்பிறகு ‘பக்கா’ படத்தில் மட்டுமே கமிட்டானார். ‘ஜாக்சன் துரை’ ரிலீஸாகி ஒரு வருடத்துக்கும் மேலான நிலையில், ‘பிக் பாஸ்’ கம்பேக்காக இருக்கும் என்பது அவருடைய எண்ணம். பிந்துவுக்கும் அது ‘சரி’ என்று தோன்றவே, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்