தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. குறிப்பாக டீசர் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சொல்லப்படும் நிலையில் படத்துக்கான முன்பதிவு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 8 மணி முதல் தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அஜித் படத்துக்கு எப்போதுமே ஓப்பனிங் சிறப்பாக இருக்கும் என்பதால் முன்பதிவிலே இந்த படத்துக்கு மிகப்பெரிய வசூல் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.