விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டார். ஓவியாவைப் போல அவரும் மனதுக்குப் பட்டதை வெளிப்படையாகப் பேசியதால், எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. ‘பிக் பாஸ்’ வீட்டின் செல்லக்குட்டி என்றே அவரை அழைத்தனர்.‘பிக் பாஸ்’ அவரை சிம்புவாக நடிக்கச் சொல்லி டாஸ்க் கொடுத்தார். அந்த டாஸ்க்கில் சிம்பு போலவே அருமையாக நடித்துக் காட்டினார் ஹரிஷ் கல்யாண். நயன்தாராவாக நடித்த பிந்து மாதவி தோள் மீது அவர் கைபோட்டு செய்த சேட்டைகள், ரசிக்கும்படி இருந்தன.