அஜித் மிரட்டினாரா? அன்புச்செல்வன் மிரட்டினாரா? கோலிவுட்டில் பரவி வரும் கதை இது

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (07:46 IST)
அஜித்தை அன்புச்செல்வன் மிரட்டினார் என்றும், இயக்குனர் பாலா அவரை அடித்தார் என்றும் கடந்த சில தினங்களாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்ரது. இதில் உண்மையில் என்ன நடந்தது என்பது அஜித், பாலா, அன்புச்செழியன் ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும். மூவருமே இதுகுறித்து இன்னும் வாயை திறக்கவில்லை. இந்த நிலையில் ஒரு விறுவிறுப்பான கதை கோலிவுட்டை சுற்றி வருகிறது.





பாலா இயக்கிய 'நான் கடவுள்' படத்தில் இருந்து அஜித் விலகியதும் பேச்சுவார்த்தை நடத்த அஜித் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது பாலாவும் அன்புச்செழியனும் அஜித்தை மிரட்டி இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்றும் இல்லையென்றால் சினிமாவிலேயே இருக்க முடியாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் திடீரென அஜித் துப்பாக்கியை எடுத்து 'இது என்னுடைய தற்காப்புக்காக பெறப்பட்ட லைசென்ஸ் உள்ள துப்பாக்கி. ஒழுங்காக கொடுத்த அட்வான்ஸை வாங்கி கொண்டு சென்றுவிடுங்கள்' என்று அஜித் மிரட்டியதாகவும், இதனையடுத்து பாலா, அன்புச்செழியன் ஆகியோர் தலைதெறிக்க ஓடிவிட்டதாகவும் ஒரு கதை வலம் வந்து கொண்டிருக்கின்றது. இது ஒருவேளை உண்மையாக இருந்தால் அஜித் ரசிகர்களுக்கு இதைவிட வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்