அன்புச்செழியன் உத்தமர்: இயக்குனர் சீனுராமசாமியின் புது ரூட்

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (07:13 IST)
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக விஷால், அமீர், சுசீந்திரன் உள்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட ஒருசிலர் அமைதியாக உள்ளனர். ஆனால் இதுவரை அன்புச்செல்வனுக்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் குரல் கொடுக்கவில்லை

ஆனால் அந்த காரியத்தை தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி தற்போது செய்துவிட்டார். அவர் தனது டுவிட்டரில், 'எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே... என்று தனது டுவிட்டரில் சீனுராமசாமி கூறியுள்ளார்.





நடிகர்களை குற்றம் சொல்வதை கூட பொருத்து கொள்ளலாம். அதில் உண்மையும் உள்ளது. ஆனால் அன்புச்செல்வனை உத்தமன் என்று கூறுவதைத்தான் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று கோலிவுட்டில் பலர் பேசி வருகின்ற்னர். ஒட்டுமொத்த திரையுலகமே ஒரு ரூட்டில் சென்றுகொண்டிருக்கும் போது இவர் மட்டும் புது ரூட்டில் செல்வது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்து வருவதாக டுவிட்டரில் பலர் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்