''அஜித்62'' பட ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்....ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (15:31 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் துணிவு.

இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும்  ஒன்று. வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் இப்படம் மோதவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகி 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வரும் ஜனவரி 17 ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி குறுகிய காலத்தில் அதாவது மே மாதத்திற்கு மொத்த படப்பிடிப்பும் முடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதனால், இந்த ஆண்டில் அஜித்தின் 2 படங்கள்  வெளியாகவுள்ள மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்