இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்கிறார். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கடந்த மே மாதம் படத்தின் பூஜை நடந்தது. இதில் படத்தின் நாயகன் விஷால், மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதுவரை 40 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு, ஷூட்டிங் நடத்த படக்குழு தயாராக உள்ள நிலையில் ஒரு மாதத்துக்கும் மேலாக விஷால் ஷூட் செல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு விஷாலின் உடல் நலப் பிரச்சனைகள் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் வினோத்துக்கு 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விஷாலின் இந்த செயலால் இந்த படத்துக்காக எஸ் ஜே சூர்யா கொடுத்த தேதிகள் எல்லாம் வீணாக்கியுள்ளனர் படக்குழுவினர். இப்போது விஷால் மீண்டும் ஷூட்டிங்குக்கு தயாராக எஸ் ஜே சூர்யாவிடம் கால்ஷீட்டுக்காக சென்றுள்ளனர் படக்குழுவினர். ஆனால் இப்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா 2 படத்தில் பிஸியாக இருப்பதால் தன்னால் தேதிகள் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளார். பின்னர் விஷாலே நேரடியாக எஸ் ஜே சூர்யாவிடம் பேசி தேதிகள் ஒதுக்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.