நானி, மிருனாள் தாக்கூர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு!

திங்கள், 2 ஜனவரி 2023 (15:02 IST)
தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் நானி மற்றும் மிருனாள் தாக்கூர் (சீதாராமம் புகழ்) இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக “நானி 30” என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த படத்தை ஷௌரிவ் இயக்குகிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்