தமன்னாவுடன் கொடைக்கானலில் என்ன செய்கிறார் உதயநிதி ஸ்டாலின்?

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (15:32 IST)
உதயநிதி ஸ்டாலின் – தமன்னா நடிக்கும் படத்தின் ஷூட்டிங், இன்றுமுதல் கொடைக்கானலில் நடைபெறுகிறது. 
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்கும் இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மதுரை வாடிப்பட்டியை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இத்தனை நாட்களாக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
 
இன்று முதல் கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர். வரும் 13ஆம் தேதியும் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்கிறார்கள்.
 
சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா  இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்