மஹாசிவராத்திரி தினத்தில் சத்குரு முன்னிலையில் ஆட்டம் போட்ட தமன்னா

புதன், 14 பிப்ரவரி 2018 (18:21 IST)
பாகுபலி' படத்திற்கு பின் நடிகை தமன்னாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ள நிலையில் நேற்று கோவை ஈஷா மையத்தில் நடந்த மஹாசிவராத்திரி அவர் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் சத்குருவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சிவராத்திரி திருவிழாவில் கலந்து கொண்டது குறித்து நடிகை தமன்னா தனது டுவிட்டரில் கூறியதாவது:

இந்த வருட சிவராத்திரி திருநாளை என்னால் மறக்கவே முடியாது. நேற்று நடந்த அனைத்துமே எனது வாழ்வில் நடந்த ஒரு மேஜிக்கல் அனுபவம் போல இருந்தது. இங்குள்ள பணியாளர்கள் அனைவரும் சிறப்புடன் சிவராத்திரி திருநாளை வழிநடத்திச் சென்றனர்.

இங்கு வந்த அனைவரும் அமைதியக இருந்தது பெரும் ஆச்சரியத்தை தந்தது. இந்த இடத்தில். இருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்து வழிபாடு செய்தேன். இதற்காக சத்குரு அவர்களுக்கு நன்றிகள் கூற கடமைப்பட்டுள்ளேன் என்று தமன்னா பதிவு செய்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின்போது தமன்னா நடனம் ஆடி பக்தர்களை உற்சாகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்