இந்தப் படத்தில், டேங்கோ என்ற புதிய வகை நடனம் ஆடுகிறார் தமன்னா. அவருக்கு டான்ஸ் நன்றாக வரும் என்றாலும், இந்த நடனம் அவருக்குப் புதிது என்பதால் முறைப்படி பயிற்சி கொடுத்து ஆடவைத்திருக்கிறார்கள்.
இருந்தாலும், படப்பிடிப்பின்போது சிலமுறை தவறி கீழே விழுந்துவிட்டாராம் தமன்னா. கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு ரத்தம் வழிந்திருக்கிறது. ஆனாலும், வலியைப் பொறுத்துக் கொண்டு நடனம் ஆடியிருக்கிறார். அதைப் பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் தமன்னாவைப் பாராட்டியிருக்கிறது.