''என்னடா கொன்றுவீங்களாடா''.... மாமன்னன் பட டிரைலர் ரிலீஸ்- இணையதளத்தில் வைரல்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (18:34 IST)
உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்பத்தின் டிரைலர் தற்போது  வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அமைச்சரான பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தயாரிப்பு  நிர்வாகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
 
இந்த நிலையில்,  மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதய நிதி ஸ்டாலின்,  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிதுள்ள படம் மாமன்னன்.  இப்படத்திற்கு , ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
 சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரமாண்டமாக நடந்தது.
 
இந்த படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.  அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்படத்தின் கதைக்களம் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக வைத்து உருவாவதாக சொல்லப்படுகிறது.
 
ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல கவனம் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர்  இன்று மாலை  6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்தபடி தற்போது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், இதுவரை நடித்திராத குணச்சித்திர வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார். அதேபோல் உதயநிதி, கீர்த்தி சுரேஷ்  மிரட்டலாக நடித்துள்ளனர். வில்லனாக பகத் பாசில் அசத்தியுள்ளார். ஒவ்வொருவரும் பேசும் வசனங்களும், காட்சியமைப்புகளும் ரசிகர்களுக்கு இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த டிரைலர் பற்றி, ''வீண் மாயை வேரறுக்க மானுடத்தின் திசை திறக்க வருகிறான் மாமன்னன்'' என்று படக்குழு டுவீட் பதிவிட்டுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்