'தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் வரை நாம் இந்த சம்பவத்தை மறந்து விடக்கூடாது' - நடிகர் விஷால்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (23:35 IST)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்டதாக ஜெயராஜ், பென்கிக்ஸ் போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில்  அவர்கள் இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இருவரின் மரணம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. இருவருக்கும் நீதி வேண்டும் என சினிமா பிரபலங்கள் முதற்கொண்டு அனைவரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷால் இதுகுறித்து கூறியுள்ளதாவது :

ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு  நடந்த கொடுரத்தில் அநீதி இழைக்கப்பட்டது ஏன் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவரை நாம் இந்த சம்பவத்தை மறந்துவிடக்கூடாது. அனைவரும் நீதி கிடைக்கும் வரை குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்