2 வணிகர்கள் மரணம் … , பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 23 ஜூன் 2020 (18:17 IST)
தூத்துக்குடி மாவட்டம்  சாத்தன் குளம் அரசடி தெருவில் வசித்து வந்தவர் பென்னீக்ஸ்,. இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார்.இவர் கொரொனா காலத்தில் வணிக மையங்கள் இயங்கும் நேரத்தை மீறுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

கடந்த 19 ஆம் தேதி அன்று கடைகளை குறித்த நேரத்தில் அடைப்பது தொடர்பாக காவல்துறைக்கும்  , பென்னீக்ஸுக்கும் தகராறு எழுந்ததாகத் தெரிகிறது.

அதனால் பென்னீக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  மகன்` கைது சம்பவத்தை தட்டிக்கேட்ட அவரது தந்தை ஜெயராஜை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, தந்தை,மகன் இருவரையும் கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று நெஞ்சிவலிப்பதாக கூறிய பென்னீக்ஸ் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பென்னீக்ஸ் இறந்தை அடுத்து, அவரது சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது தந்தை ஜெயராஜ் நெஞ்சி வலிகாரணமாக மருத்துவமனைவில் அடைக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஒரே சிறையில் மகனும் தந்தையும் 10 மணிநேர இடைவெளியில்  உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் மரணமடைந்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், இறந்த தந்தை, மகன் இருவர் உடலையும் 3 மருத்துவர் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும்,  பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்