நாளை திருமணம்... வைர மோதிரம் பரிசு... ரசிகர்களுக்கு அட்வைஸ்... வனிதா உற்சாகம் !

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (20:16 IST)
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக அறியப்பட்டு சினிமவில் அறிமுகமானாலும் வனிதா பெரிதாக நடிப்புத் துறையில் வரவில்லை. ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்ட பின் தமிழகம் முழுக்க அவர் அறியப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சில வாரங்களாக இயக்குநர் பீட்டர்பால் என்பவரை வனிதா  3 வதாக திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அதை உறுதி செய்த அவர், நாளை ஜூன் 27 ஆம் தேதி மிக எளிமையக திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், வாழ்கையில் சோகம், மகிழ்ச்சி என எல்லாமே இருக்கும் ஆனால் அடுத்த பக்கத்தை நீங்கள் பார்க்காமல் விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமலேயே போய்விடும் என்று தன் ஃபாலோயர்ஸ்கு அட்வைஸ் செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக தன் மூன்றாவது திருமணத்திற்கு அம்மாவிடம் இருந்து வைர மோதிரம் பரிசாகக் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்