“பூம்ரா விஷயத்தில் டிராவிட்டும், ரோஹித் ஷர்மாவும் அவசரப்பட்டு விட்டார்கள்…” முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (15:17 IST)
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பூம்ரா காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசும்போது “பூம்ராவை அவசரப்பட்டு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட வைத்துவிட்டார்கள். அவருக்கு இன்னும் கொஞ்சம் ஓய்வளித்திருந்தால் அவர் டி 20 உலகக்கோப்பைக்கு தயாராக வந்திருப்பார். ஆனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் அவசரப்பட்டுவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்