ராட்சசன் படத்தின் இசையை தமன் காப்பியடித்தாரா? இயக்குநர் பதில்

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (19:54 IST)
தெலுங்கு நடிகர் நானி, நிவேதா தாமஸ் அதிதிராவ், சுதீர் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில்  ஓடிடி தளத்தில் வெளியான படம் வி. இப்படத்தை மோகன கிருஷ்ணா இயக்கியுள்ளார். தில் ராஜூ என்பவர் தயாரிக்க, தமன் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியான நாளில் இருந்து ஒரு சர்ச்சை உருவானது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ராட்சசன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டதால் அதிலிருந்து வி படத்தில் இசையை தமன் காப்பி செய்ததாக தெரிவித்தனர்.

இதனை இயக்குநர் மோகன் கிருஷ்ணா மறுத்துள்ளார். மேலும் எல்லா இசையமைப்பாளர்களும் இதுபோன்ற படத்தை குறிப்பிட்ட நோக்கில் பார்த்து உணர்வார்கள் அதற்கேற்ப இசைகருவிகளை மீட்டி கம்போஸ் செய்வார்கள் என தெரிவித்து,. தமன் தனித்தன்மை வாய்ந்த இசையமைப்பாளர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்