'சர்வைவா', 'தலை விடுதலை' அடுத்தது 'காதலடா! இன்னும் ஒரே நாள்

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (23:20 IST)
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' 'திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து இணணயதளங்களை அலற வைத்தது



 
 
இந்த நிலையில் அடுத்து வெளியாகும் இந்த படத்தின் பாடல் மெலடி ரொமான்ஸ் பாடல் என்று ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பாடல் குறித்த விவரம் வெளிவந்துள்ளது.
 
'காதலடா' என்று தொடங்கும் இந்த பாடல் கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதியது. முதன்முதலாக அஜித்துக்காக அனிருத் இசையில் கபிலன் எழுதிய இந்த பாடல் வரும் வியாழன் அன்று அதாவது ஜூலை 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்