அஜித் பிறந்தநாளுக்கு சன் டிவி கொடுத்த பரிசு

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (16:54 IST)
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அஜித் நடித்த விவேகம் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது
 
அஜித் நடிப்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் விவேகம். சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படத்தில், அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விவேக் ஒபரோய் வில்லனாக நடித்திருந்தார். 
அனிருத் இசையமைத்த இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தியகாராஜன் தயாரித்தார். இப்படத்தின் பிரிமியர் ஷோ வரும் மே 1 அன்று காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அன்று அஜித்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது அஜித்தின் பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்