மெர்சல் சாதனையை முறியடித்த விஸ்வாசம்!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (11:02 IST)
கடந்த ஜனவரி 10ம் தேதி ரஜினியின் பேட்ட, மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.


 
இரண்டு படங்களுமே வசூலில் சக்கை போடு போட்டு வருகின்றன. எனினும் தமிழகத்தில் விஸ்வாசம் படம், பேட்ட படத்தை விட வசூலில் முந்திவிட்டதாக கூறப்படுகிறது.
 
குடும்ப செண்டிமெண்ட் மற்றும் உருக வைக்கும் காட்சிகள் காரணமாக குடும்பம் குடும்பமாக விஸ்வாசம் படத்துக்கு வந்ததால் வசூலில் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.
 
இந்நிலையில் மெர்ச்ல் படத்தின் தமிழக வசூல்  சாதனையை விஸ்வாசம் படம் முந்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்ட் செய்து கருத்துககளை பதிவிட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்