இதற்காகத் தொழில்துறை, உற்பத்தி மற்றும் ஆற்றல், விளம்பரத் துறை, வர்த்தகம், ஊடகம், விவசாயம் உள்ளிட்ட 16 துறைகளில் இருந்து சாதனை மனிதர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதற்காக 300 நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் இருந்து நிபுணர்களின் உதவியோடு 175 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் இருந்து 30 பேர் இறுதி செய்யப்பட்டதாக ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.