மறுபடியும் எழிலுடன் இணைகிறாரா விஷ்ணு விஷால்?

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (15:06 IST)
விஷ்ணு விஷால் - எழில் கூட்டணி மறுபடியும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.



 


எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. நிக்கி கல்ரானி ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், காமெடியனாக சூரி நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற சூரியின் ‘புஷ்பா புருஷன்’ காமெடி, மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

ஆனால், அடுத்ததாக வெளியான ‘கதாநாயகன்’ படம் தோல்வியைத் தழுவியது. இதனால் அப்செட்டான விஷ்ணு விஷால், மறுபடியும் எழிலுடன் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ மற்றும் ‘சின்ட்ரெல்லா’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்