ஓடும் காரில் உயிரை பணய வைத்த இளைஞர்களை கண்டித்த விஷ்ணு விஷால்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (11:30 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால்  தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துக்கொண்டனர். பின்னர்  பேட்மிண்டன் வீராங்கனையான  ஜுவாலா கட்டாவை காதலித்து விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருக்கின்றார்.

இந்நிலையில் தற்ப்போது விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், காரில் அட்டகாசம் செய்த இளைஞர்களை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு, " நம் நாட்டின் படித்த இளைஞர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். பொதுவாக நான் இதை செய்ய மாட்டேன். ஆனால், இதை பதிவிட வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர்கள் தங்கள் உயிரை மட்டும் பணயம் வைத்துக் கொள்ளாமல், மற்ற பயணிகளை தொந்தரவு செய்யும் வகையில் தேவையற்ற ஸ்டண்ட் முயற்சிக்கிறார்கள். தயவு செய்து இதை பாருங்கள் ஐதராபாத் போலீஸ் என்று பதிவிட ஹைதெராபாத் காவல் துறை விஷ்ணு விஷாலிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்