ஆனால் வேற வழியில்லை சொல்லி தான் ஆகனும்: விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ டீசர்..!

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (11:27 IST)
நடிகர் அதர்வா சகோதரர் ஆகாஷ் முரளி என்பவர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘நேசிப்பாயா’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியிடப்பட்டது.
 
ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதுடன், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விரைவாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், இன்று காலை "நேசிப்பாயா" படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் டீசர் வெளியிடப்பட்டு, இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
‘நேசிப்பாயா’ படம் ரொமான்ஸ் மற்றும் காமெடியாக தொடங்கி, பின்னர் சீரியஸாக சேஸிங் என தொடர்கிறது என்பதும், இந்த படம் நிச்சயம் விஷ்ணுவர்தனின் கம்பேக் படத்தை இருக்கும் என கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்