இரும்புத் திரையில் மிஸ்ஸான காம்பினேஷன்…. இப்போது விஷாலுடன் இணையும் நடிகர்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:41 IST)
விஷால் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் நடிகர் ஆர்யாவும் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இருவரும் இரும்புத்திரை படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்தார்.

இந்நிலையில் இப்போது ஆனந்த் ஷங்கர் படத்தில் ஆர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இருவரும் பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்