கார்த்தியின் படத்தில் நடித்துள்ள வனிதாவின் மகன்… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:37 IST)
கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்தில் சிறுவயது கார்த்தியாக நடித்தவர் வனிதாவின் மகனாம்.

வரிசையாக ஹிட் படங்களாக நடித்து வந்த கார்த்திக்கு அமைந்த ஒரு சில தோல்விப் படங்களில் சகுனியும் ஒன்று. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதில் சிறுவயது கார்த்தி தன் மாமா மகளை காதலிப்பது போன்ற பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறும். அதில் அந்த சிறுவனாக நடித்தது சர்ச்சைகளுக்குப் பெயர் போன வனிதாவின் மகனாம். இது சம்மந்தமான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்