விஷாலுக்கு ஜோடியாகும் சமந்தா

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (18:14 IST)
திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று, சமந்தாவின் வருங்கால கணவர் நாக சைதன்யாவே கூறிவிட்டார். அப்புறமென்ன... மளமளவென படங்கள் சமந்தாவுக்கு புக்காகி வருகின்றன.


 
 
கத்திச் சண்டை படத்தை முடித்த விஷால், மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு அறிமுக இயக்குனர் மித்ரனின் இரும்பு திரை படத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க சமந்தாவிடம் பேசி வருகின்றனர். அவர் சம்மதம் தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
 
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
அடுத்த கட்டுரையில்