விக்ரமுடன் பார்த்திபன் மோதும் சண்டைக் காட்சி, துருக்கியில் படமாக்கப்பட இருக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, குன்னூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது. தற்போது அபுதாபியில் முக்கியக் காட்சிகளைப் படமாக்கிவரும் கெளதம் மேனன், அடுத்ததாக துருக்கியில் படப்பிடிப்பை வைத்துள்ளார். விக்ரமும், பார்த்திபனும் மோதும் சண்டைக் காட்சி, அங்கு படமாக்கப்பட இருக்கிறது.
இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.