நடிகர் விமல் நடிப்பில் துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த தொடரை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விமலுக்கு ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது. இதையடுத்து தற்போது விமல் படங்கள் மேல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது விமல் துடிக்கும் கரங்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வேலுதாஸ் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். நடிகர் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது விமல் டிவிட்டரில் வெளியிட அது கவனம் பெற்றுள்ளது. போஸ்டரில் விமல் ஸ்டைலிஷான லுக்கில் காணப்படுகிறார்.