ஓநாய்-உரோம அலங்காரத்துடன் விலங்கு-தோல் கோட் அணிந்திருந்தார்.

திங்கள், 13 ஜூன் 2022 (23:54 IST)
மறுபுறம் அவளோ கருமையான தோல், நீண்ட கால்கள், மற்றும் ஜடை தரித்தது போல தலைமுடியை பின்னியிருந்தாள். இருவரும் முதல் முறையாக சந்தித்துக் கொண்டபோது, அவன் தொண்டையை கணத்துக் கொண்டு, அவளை மேலும் கீழுமாக பார்த்தான்,
 
மேலும் ஓர் அபத்தமான உயர்ந்த, நாசிக் குரலில் முணுமுணுத்தபோது அவள் அவனை வெறுமையாக திரும்பிப் பார்த்தாள். அந்த இருவருக்கும் அவரவர் மொழிகள் பரஸ்பரம் புரிந்திருக்கவில்லை.
 
இருவரும் அசடு வழிவது போல சிரித்தனர், அடுத்து என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் ஊகிக்க முடியும்.
 
இரு துருவங்களின் காதல் கிளர்ச்சி
நியாண்டர்தால் உலகம்
 
சிகாகோவின் இல்லினாய்ஸ் ஃபீல்ட் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரியில் ஒரு நியாண்டர்டால் குடும்பத்தின் இனப்பெருக்க வரலாறை காட்சிப்படுத்தும் ஓவியப்படும்
 
இருவரின் காதல் வெளிப்பாடு ஓர் உணர்ச்சியூட்டக்கூடிய காதல் நாவலில் இருந்த ஒரு காட்சிக்கு சளைக்காதது போல இருந்திருக்கலாம்.
 
ஒருவேளை அந்தப் பெண், நியண்டர்தால் இனத்தைச் சேர்ந்தவராகவும், அந்த ஆண் நம் இனத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர்களின் உறவு சாதாரண, நடைமுறை வகையாகக் கூட இருக்கலாம்.
 
இந்த சந்திப்பில் உண்மையில் என்ன நடந்தது என்பதை நாம் ஒருபோதும் அறிய வாய்ப்பில்லை - ஆனால், மற்றவர்கள் இது போன்ற ஜோடி இப்படித்தான் ஒன்று சேர்ந்தது என உறுதியாக இருப்பார்கள்.
 
இனி அறிவியல்பூர்வ கதைக்கு வருவோம்.
 
சுமார் 37,000-42,000 ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 2002 இல், ருமேனிய நகரமான அனினாவுக்கு அருகிலுள்ள தென்மேற்கு கார்பாத்தியன் மலைகளில் உள்ள நிலத்தடி குகை அமைப்பில் இரண்டு ஆய்வாளர்கள் ஓர் அசாதாரண கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்.அங்கு சாமானிய மனிதர்கள் செல்வது எளிதான காரியம் இல்லை.
 
நியாண்டர்தால் உலகம்
 
ஜிப்ரால்டரில் கண்டுபிடிக்கப்பட்ட நியண்டர்டாலின் புதைபடிம மண்டை ஓடு லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
முதலில் அவர்கள் 200 மீ (656 அடி) நிலத்தடி ஆற்றில் கழுத்து ஆழத்தளவு நீரோட்டத்தில் சென்றனர். பின்னர் நீருக்கடியில் 30 மீ (98 அடி) ஒரு ஸ்கூபா டைவ் செய்தனர். அதைத் தொடர்ந்து 300-மீட்டர் (984 அடி) போர்ட்டா அல்லது "மவுஸ் ஹோல்" எனப்படும் துவாரம் வழியாக ஏறினர் - அதன் வழியாக அவர்கள் முன்பு அறியப்படாத அறைக்குள் நுழைந்தனர்.அந்த இடம்தான் "எலும்புக் குவியல்களின் குட்டிக் குகை" என அழைக்கப்படுகிறது.
 
அதற்குள் ஆயிரக்கணக்கான பாலூட்டிகளின் எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மனிதன்-விலங்குகளின் நீண்ட வரலாற்றில், இது அறியப்பட்ட முதன்மையான குகையாக இருக்கக் கூடும். இங்கு ஆண் கரடிகள் வசித்ததாக கருதப்படுகிறது.
 
அங்கே பழுப்பு கரடியின் அழிந்துபோன உறவுகளின் எச்சங்கள் இருந்தன. அவற்றின் மேற்பரப்பில் ஒரு மனிதனின் தாடை எலும்பு இருந்தது.
 
அது ஐரோப்பாவில் உள்ள 'ரேடியோ-கார்பன் டேட்டிங்' முறையில் அறியப்பட்ட பழமையான ஆரம்பகால நவீன மனிதர்களில் ஒருவருடையது என தெரியவந்தது. எச்சங்கள் இயற்கையாகவே குகைக்குள் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டிருக்கலாம்.
 
அந்த நேரத்தில் குகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றை கவனித்தனர்.
 
அந்த தாடை எலும்பு அதன் தோற்றத்தில் தவறாமல் நவீனமாக இருந்தாலும், அது சில அசாதாரணமான, நியாண்டர்தால் போன்ற அம்சங்களையும் கொண்டிருந்தது.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அனுமானம் உறுதிப்படுத்தப்பட்டது.2015ஆம் ஆண்டு கண்டுபிடிப்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மரபணு கூறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, ​​அந்த தாடைக்குரிய நபர் ஆண் என்றும், 6-9% நியாண்டர்தால் இனத்தவராக அவர் இருக்கலாம் என்றும் கண்டறிந்தனர்.
 
இது ஆரம்பகால நவீன மனிதனில் இதுவரை காணப்படாத மிக உயர்ந்த செறிவு ஆகும், மேலும் தற்போதைய ஐரோப்பியர்கள் மற்றும் ஆசியர்களில் காணப்படும் அளவு போல அது மூன்று மடங்கு அதிகமாகும், அதன் மரபணு அமைப்பு தோராயமாக 1-3% வரை நியண்டர்தால் அம்சத்தை கொண்டிருந்தது.
 
நியாண்டர்தால் உலகம்
 
நியண்டர்தால்கள் கழுகுகளைப் பிடித்து அவற்றின் இறகுகளை அலங்காரத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
 
தாடை எலும்பைத் தவிர, இதேபோன்ற அம்சங்களின் கலவையைக் கொண்டிருந்த அதே குகையில் மற்றொரு நபரின் மண்டை ஓடு துண்டுகளை ஆய்வாளர்கள் குழு கண்டறிந்தது.
 
ஆராய்ச்சியாளர்களால் இன்னும் அதன் எச்சங்களிலிருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்க முடியவில்லை, ஆனால் தாடை எலும்பைப் போலவே, அவை நியாண்டர்தால் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
அப்போதிலிருந்து, ஆரம்பகால நவீன மனிதர்களுக்கும் நியண்டர்தால்களுக்கும் இடையிலான உடலுறவு ஓர் அரிய நிகழ்வு அல்ல என்பதற்கான சான்றுகள் பெருகி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்