இதனை அடுத்து மீண்டும் பகத் பாஸில் மற்றும் வடிவேலு இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. இந்த படத்தின் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
ஜூலை மாதத்தில் இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று டீசர் வெளியாகிக் கவனம் பெற்றுள்ளது. வடிவேலு மற்றும் பஹத் இடம்பெறும் காட்சிகள் அழகிய லொகேஷன்கள் விண்டேஜ் பாடலோடு தொடங்க, அதன் பின்னர் இருவருக்குமான மோதல் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வடிவேலு ஒரு சேல்ஸ்மேன் லுக்கில் இருக்க, பஹத் போக்கிரி இளைஞனாகக் காணப்படுகிறார். ஒரு ஃபீல்குட் படமாக மாரீசன் இருக்கும் என்பதை டீசர் கோடிட்டுக் காட்டுகிறது.