வசூலில் தொடர்ந்து தடுமாறும் விக்ரம் வேதா… 9 நாள் வசூல் இவ்வளவுதான்!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (08:57 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு போட்டியாக பாலிவுட்டில் வெளியானது விக்ரம் வேதா திரைப்படம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் ரிலீஸான நாளில் விக்ரம் வேதா திரைப்படம் ரிலீஸானது. படம் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் வசூல் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதுவரை வெளியாகி 9 நாட்களில் 65 கோடி ரூபாய் அளவுக்கே வசூலித்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் கம்மியான வசூல் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்