’மகான் 2’ திரைப்படம்.. விக்ரம் கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (15:03 IST)
விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மகான். இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 
 இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் சில மாதங்களாக வேண்டுகோள் விடுத்த நிலையில் சற்று முன் விக்ரம் ’மகான் 2’ படம் குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார். ’மகான் 2’  என குறிப்பிட்டு கேள்விக்குறியோடு பதிவு செய்துள்ள விக்ரம் இரண்டு அட்டகாசமான ஸ்டில்களையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஸ்டில்கள் தற்போது இணையதில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஏற்கனவே ’மகான் ’ முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருப்பார் என்பதால் மகான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது விக்ரம் ’மகான் 2’ படத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்