இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான் என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் தங்கலான் திரைப்படம் மேலும் தள்ளிபோகும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.