விக்ரமுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா....எந்த படத்தில் தெரியுமா?

Sinoj

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (18:15 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள சியான்62 பபடத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர்,  அந்நியன், பிதாமகன், சேது போன்ற படங்களில் தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார்..

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் உடன் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சியான்62 என்ற  படத்தில் நடிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின்  ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருதாகவும், அடுத்த அனடு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் இயக்குனர் அருண்குமார் தெரிவித்திருந்தார். இப்படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என கூறப்பட்டது.

அதன்படி இன்று இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டது.

அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்துள்ளார். இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, விக்ரம் 62 பட புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்