மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், ஒரு படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறார்.
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் படம் ‘கொடிவீரன்’. மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா என இந்தப் படத்தில் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். சகோதரி செண்ட்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில், சசிகுமாருக்கு மச்சானாக விதார்த் நடிக்கிறார். கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், சசிகுமாருக்கு வில்லனாக ‘மதயானைக் கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன் நடிக்கிறார். 2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், கதிர், ஓவியா, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது ராமநாதபுரம், சிவகங்கைப் பகுதிகளில் ‘கொடிவீரன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது