பிரியங்கா சோப்ராவுக்கு சப்போர்ட் செய்யும் சன்னி லியோன்!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (11:36 IST)
பிரதமர் மோடி ஜெர்மன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது அவரை சந்தித்துப் பேசினார் பிரியங்கா சோப்ரா. அப்போது  அவர் குட்டை பாவாடை அணிந்திருந்ததோடு, பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார்.

 

இதை பார்த்த பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தை அடுத்து, அம்மாவுடன் தான் கால் தெரியும் படியாக அமர்ந்திருக்கும் போட்டோவை  வெளியிட்டு நாங்கள் சாதாரணமாகவே இது போல் உடை அணிவோம். அதனால் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.
 
இந்த நிலையில், கவர்ச்சிப்புயல் சன்னி லியோன், பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில், பிரியங்கா சோப்ரா  அந்த உடையில் பிரதமரை சந்தித்தபோது யாரும் ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. பிரதமரே அதை பெரிதாக எடுக்காதபோது, மற்றவர்கள் இதற்கு கண்டனம் தெரிவிப்பது சரியல்ல. மேலும், ஒருவர் எப்படிப் பட்டவர் என்பதை அவர்கள்  அணியும் உடையை வைத்து மதிப்பிடாமல் அவர்களது மனதை வைத்து மதிப்பிடுவதே சரியானது என கவர்ச்சி புயல் சன்னி  லியோன் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்