துருவ்விக்ரம்-பாலா படத்தின் டைட்டில் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2017 (19:40 IST)
பிரபல இயக்குனர் பாலா இயக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகவுள்ளார் என்பது தெரிந்ததே. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.



 
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'வர்மா' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர்.
 
இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிக்க நடிகை ஸ்ரேயா ஷர்மா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் குழந்தை நட்சத்திரமாக 'சில்லுன்னு ஒரு காதல்' மற்றும் எந்திரன் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதால் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்