பொன்னியின் செல்வனை பார்க்க என் அம்மாவை அழைத்து வருவேன்: விக்ரம்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (10:36 IST)
பொன்னியின் செல்வனை பார்க்க என் அம்மாவை நான் தியேட்டருக்கு அழைத்து வருவேன் என நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
பொன்னியின் செல்வன் நாவல் என்பது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நாவல் என்பதும் இந்த நாவலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் தற்போது திரைப்படமாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த நாவலை சிறுவயதில் படித்த தற்போதைய முதியவர்கள் இந்த படத்தை திரையில் பார்க்க அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்
 
பல டுவிட்டர் பயனாளிகள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் என்னுடைய அம்மா அப்பா இந்த படத்தை பார்க்க ஆசையாக உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விக்ரம் இன்றைய இளைஞர்கள் தங்களுடைய அம்மா அப்பாவை ’பொன்னியின் செல்வன்’ படத்திற்கு அழைத்து வருகிறார்கள் அந்த வகையில் நானும் என் அம்மாவை இந்த படத்தை பார்க்க திரை அரங்கிற்கு அழைத்து வருவேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்