பிக்பாஸ் விக்ரம் சரவணனுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (18:05 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரம் சரவணனுக்கு ரூ.15 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவு பெற உள்ளது. இந்த நிலையில் நேற்று விக்ரம் சரவணன் எலிமினேஷன் செய்யப்பட்டார். 
 
அவருக்கு தினமும் ரூ.18000 சம்பளம் என்று பேசப்பட்டிருந்ததாகவும் இதனை அடுத்து அவர் 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு சுமார் 15 லட்சம் சம்பளம் வரும் என்றும் கூறப்படுகிறது. 
 
விஜய் டிவியில் அவர்  சீரியல் நடித்துக் கொண்டிருந்தபோது மிகவும் குறைவான சம்பளம் தான் அவருக்கு கிடைத்தது என்றும் தற்போது அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி அவருக்கு வேறு சில வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்