‘விக்ரம்’ தமிழ்நாடு வசூல் எவ்வளவு? மேடையில் ஓபனாக அறிவித்த உதயநிதி!

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (09:03 IST)
விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் படத்தின் தமிழ்நாடு விநியோகர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூலமாக கிட்டத்தட்ட 300 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த விக்ரம் வெற்றி விழா சந்திப்பில் கலந்துகொண்ட விக்ரம் படத்தின் தமிழக விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது “எல்லோரும் படத்தின் வசூல் பற்றி அறிவித்து வருகிறார்கள். தமிழ்நாடு விநியோகஸ்தராக நான் இப்போது அறிவிக்கிறேன். தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் ஷேராகவே 75 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத வசூல். இன்னும் 3 வாரங்களுக்கு திரையரங்குகளில் ஓடும். இப்போதும் வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் பலர் எனக்கு போன் செய்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

விநியோகஸ்தர் பங்காக 75 கோடி ரூபாய் வசூல் என்றால் ஒட்டுமொத்தமாக திரையரங்கம் மூலமான வசூல் 130 கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்