இந்தியன்-2 படம் தொடங்குவதுவதை உறுதி செய்த கமல் !

வெள்ளி, 17 ஜூன் 2022 (23:47 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் இந்தியன் -2.பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இப்படப்பின்போது ஏற்பட்ட விபத்தினால் சில நாட்கள் படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டது. பின்,  கொரொனா பாதிக்களாலும் படப்பிடிப்பு நீண்ட நாட்களாகத் தடைபட்டது.

சமீபத்தில், கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் சூப்பர் ஆகி வசூல் குவித்ததை அடுத்து,தற்போது, கமலின் அடுத்தபடங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என உதய  நிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன்,  இந்தியன் 2 படம்  பொருளாதாரச் சிக்கலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது; ஆர்.சி 15 படத்தை ஷங்கர் முடித்த பின், இப்படத்தின் வேலைகள் தொடங்கும். நானும் ஷங்கரும் இப்படத்தில் இணைய ஆயத்தமாக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து ரகுல் பிரீத்தி சிங்க் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால்    நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியா அபார வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்