'' கமல் உங்களுக்கு என்ன பரிசளித்தார்'' ரசிகரின் கேள்விக்குப் பதிலளித்த அனிருத்!

புதன், 15 ஜூன் 2022 (22:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடித்து தயாரித்த படம் விக்ரம். இப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றியைப்  பெற்றுள்ளது.

இந்த நிலையில், விக்ரம் படம் 7 நாட்களில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து ரசிகர்களுக்கும் மக்களுக்கும் கமலஹாசன் நன்றி தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜும், இசையமைப்பாளர் அனிருத்தும் கேரளாவில் உள்ள விக்ரம் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் சென்று ரசியகர்களைச் சந்தித்தனர். அப்போது, ஒரு ரசிகர், அனிருத்திடம் கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசளித்தார் என்று கேட்டார். அதற்கு அனிருத், இப்படத்தில் என்னை இசையமைக்க வைத்ததே எனக்கு ஒரு பரிசுதான் என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்