விக்ரம்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் வில்லன் இவர் தான்: பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (19:43 IST)
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது கிட்டத்தட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த படம் விரைவில் திரையரங்குகள் திறந்தவுடன் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை அவர் கம்போஸ் செய்து முடித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பல நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டதாக வெளி வந்த தகவலை அடுத்து தற்போது திடீர் திருப்பமாக விக்ரமே இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்து வில்லனாக நடிக்கிறாரா? அல்லது துருவ் விக்ரம் நாயகனாகவும் விக்ரம் வில்லனாகவும் நடிக்கிறாரா? என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை என்றாலும் விக்ரம் வில்லனாக இந்த படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது 
 
ஏற்கனவே ஒரு சில படங்களில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்துள்ள விக்ரம் தற்போது முழு நேர வில்லனாக நடிக்க உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்