ஆண்குயினா....? இதென்னடா கீர்த்தி சுரேஷிற்கு வந்த சோதனை!

திங்கள், 22 ஜூன் 2020 (15:35 IST)
சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரு விஷயம் வைரலாகி உலகம் முழுக்க சுமார் ஒரு  வாரத்திற்கு மேல் அதை பற்றியே பேசப்படுவதெல்லாம் வழக்கமான ஒன்று தான். அந்தவகையில் கடந்த சில நாட்களாகவே பேஸ் ஆப் சேலஞ் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி  வருகிறது.

ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும் பாலினத்தை மாற்றி காண்பிக்கும் இந்த ஆப் செம பேமஸ் ஆகி வருகிறது. இந்த ஆப்பின் மூலம் நிஜ பெண்களை விட பெண்ணாக மாறிய ஆண்கள் தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்ற கருத்தெல்லாம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஹாரத்தி, சிம்பு,  த்ரிஷா, ஆல்யா மானசா , மணிமேகலை உள்ளிட்ட பிரபலங்களின் பாலின மாற்று புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. அந்த வகையில் தற்ப்போது கீர்த்தி சுரேஷ் பெண்குயின் திரைப்பட போஸ்டரை பேஸ் ஆப் மூலம் ஆணாக மாற்றி "ஆண்குயின்" டைட்டில் போட்டு வைராக்கியுள்ளார். செம காமெடியாக இருக்கும் இந்த போஸ்டர் தற்ப்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்